Site icon childhealthtoday-childhealth wiki

பற்களின் தூய்மையும், பாதுகாப்பும்

நம் அழகிய முத்துப் போன்ற பற்கள் தரும் புன்னகை  நம்மை அரசர்\அரசி என திகழ வைக்கும். நமக்கு நல்ல ஆரோக்கியமான, வெண்மையான பற்கள் தேவை. இதற்கு மிகவும் சுலபமான வழி என்னவென்றால் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உப்பே ஒன்றாகும். இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பற்களின் உபாதையால் அவதியுறுகின்றனா;. ஈறுகளிலிருந்து இரத்தம், சொத்தை பற்கள், தூய்மையற்ற மூச்சு போன்றவைகளால் அவதியுறுகின்றனா;. ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம், சொத்தைப் பற்கள் புகைப்பிடிப்பதாலும், புகையிலையை உபயோகிப்பதாலும் ஏற்படுகிறது. ஆரோக்கியமான பற்களுடனும், ஈறுகளுடனும் திகழ கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஸ்டரெப்டோகாக்கஸ் கிருமிகளாலே இம்மாதிரியான  தொல்லைகள் உருவாகின்றன. இதை உப்பு என்னும் மிகவும் சாதாரணமாக கிடைக்கும் பொருளினால் அழிக்கலாம். எனவே பற்களை உப்பினால் தேய்த்தால் இந்த கிருமிகள் அழிவதுடன் சுத்தமான பற்கள் கிடைக்கும். இதனால் கிருமிகளை கொல்லப்படுவதோடு வாய் துற்நாற்றத்தையும் அகற்றுகிறது.

 உணவு உண்டு முடித்தவுடன் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

 இனிப்பு வகையான திண்பன்டங்களை குறைவாக உண்ண வேண்டும்.

 ஓவ்வொரு உணவுக்கு பின்னும் பழங்கள், பச்சடியை உண்ண வேண்டும். இவை பற்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

 இனிப்பு வகைகளை குறைத்து (அ) உண்ணாமல் இருப்பது நல்லது.

 ஓவ்வொரு உணவுக்கு பின்னும் காய்கறி பச்சடிகளை உண்பதால் பற்கள் சுத்தமாகின்றன.

 புளியங்காய் மற்றும் புளிப்பான திண்பன்டங்களை உண்பதால் பற்கள் சேதமடைகின்றன

.  சாக்லெட்டுகள் சாப்பிடுவதால் பற்கள் சொத்தையாகின்றன

.  குழந்தைகள் சர்க்கரை கலந்த பாலை குடிப்பதனால் பற்கள் சொத்தையாகின்றன.

குழந்தைகள் 8 வயது ஆகும் வரை தனியாக பற்கள் தேய்பதில்லை. எனவே பெற்றோர்கள் உதவ வேண்டும

நன்றி.டாக்டர்.ஹேமந்த் ஜோஷி மும்பை

Exit mobile version