Site icon childhealthtoday-childhealth wiki

உலகத்தாய்ப்பால் வாரம் 2021

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலகத்தாய்ப்பால் வாரமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பாலூட்டுதலை அதிகரிக்க செய்யும் வழி விழாவின் முழக்கமாக அறிவிக்கப்படும். 2020 ஆண்டிற்கு

தாய்ப்பாலூட்டுதலைப்பாதுகாப்போம் !!!!பகிர்ந்துகொள்வோம் இப்பொறுப்பினை!!!! என்ற முழக்கம் உலகெங்கும் ஒலித்து வருகிறது.

கோவிட் 19 பெருந்தொற்றினால் ,,உலகமக்கள் சமுதாயம் நிறைய சவால்களை எதிர்கொண்டனர்.. உயிர் பிழைத்திருத்தல், உடல்நலம், மற்றும் நல உணர்வு ஆகியவை எப்போதையும்விட இப்போது  முக்கியமாகிவிட்டன. குறுகிய மற்றும் நீண்ட கால உடல்நலம்,_ஊட்டச்சத்து மற்றும்  உணவு குழந்தைக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் வாழ்க்கையின் அடிக்கல் தாய்ப்பாலூட்டுதல் ஆகும்.

அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான,இதனை மரியாதையுடன் பாதுகாத்து முழுமையாக  கடைப்பிடிக்க வேண்டும். பொது சுகாதாரக்கொள்கை  வழியாக  அரசும் மற்ற பொறுப்புகளில் உள்ளவர்களும் ஒன்றிணைந்து  தாய்ப்பாலூட்டுதலுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.இதனைப் .பாதுகாப்பதற்கும் ஆதரிப்பதற்கும் இது அவசியமானதாகும்.

மக்கள் நலத்துறை ஊழியர்களுக்கு  சிறந்த  பயிற்சியினைத்தந்து , திறனை அதிகரித்து   நேரத்தை ஒதுக்கிஅதிகப் பலன் அளிக்கக்கூடிய  தரமுள்ள சேவையினை வழங்க போதுமான முதலீடு செய்யப்படவேண்டும். அதிகரிக்கப்பட்ட மகப்பேறு மற்றும் பெற்றோருக்கான விடுமுறைச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்களின் உரிமை நிலை நாட்டப்படும் இதனுடன் ஐ எம் எஸ் சட்டம் மற்றும் உலக சுகாதாரநிறுவனத்தின் அறிவுரைக்கூறுகள்(codes) முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்

கோவிட் 19 பெருந்தொற்றுக்காலத்தில் தாய்ப்பாலூட்டுதல் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்பாதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கினால் பெற்றோர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டியிருந்தது.  அதனால் குழந்தையை வளர்த்துப் பாலூட்ட வாய்ப்பும் ,அவர்களோடு செலவிடபோதுமான நேரமும் கிடைத்தது .சில சமயம் பல நாடுகளில் கோவிட் 19 நோய்த்தொற்று குழந்தைக்குப் பரவிவிடுமோ? என்ற அச்சத்தின் காரணமாக தாயும் செய்யும் பிரிக்கப்பட்ட அவலமும் நடந்தது. குழந்தையைத் தாயிடம் இருந்து பிரிப்பது மூலம் தாய்ப்பால் ஊட்டுதலைத் தொடங்குவது மற்றும் தொடர்வது மிகவும் பாதிக்கப்படுகிறது.பணிச்சுமை மிகுந்த மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பு  ஆகியவை எளிதாக ஆலோசனை பெறுவதினைக் குறைத்து விட்டன. செய்தி ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் செயற்கைப்பால்தயாரிப்பு நிறுவன விளம்பரங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன . தாய்ப்பாலூட்டுதலுக்கு குறிப்பிடத்தக்க முக்கிய சவால் குழந்தைஉணவு தயாரிப்பு நிறுவனங்களின்  வரம்பற்ற விளம்பரங்கள் மற்றும் ஒழுங்கு முறையற்ற சந்தைப்படுத்துதலும் ஆகும்.  இச்செயல்களைச் சட்டத்தொகுப்புகளினால்(codes) கட்டுப்படுத்தப்படவும் தேசியச் சட்டங்கள் மூலம் ஒழுங்குபடுத்த  வேண்டும்

———————————————————————————————————-

பெரும்பான்மையான பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதைத்தான்  தேர்ந்தெடுக்கிறார்கள் .ஆனால்.துரதிர்ஷ்டவசமாக எவ்வளவு நாட்கள் தாய்ப்பால்தர விரும்புகிறார்களோ அவ்வளவு நாட்கள் தர முடியாமல் போய்விடுகிறது. தாய்ப்பால் தர உகந்த சூழ்நிலை அமைய நிறைய தடைக்கற்கள் உள்ளன.தேசிய அளவில், சமூகத் தலைமையின் போதிய  உறுதியின்மை மற்றும் தாய்ப்பால் ஊட்டுவது ,பாதுகாப்பது, ஆதரிப்பது தொடர்பான நீண்டகால திட்டம் இல்லாமை ஆகியவை சில முக்கிய காரணங்களாகும்

*உலக அளவில் 43 விழுக்காடு பிறந்த குழந்தைகள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர் 41 சதவீத குழந்தைகள் மட்டுமே 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் குடிக்கின்றனர் .70 விழுக்காடு பெண்கள் குறைந்தபட்சம் குழந்தையின்  ஒரு வயது வரை தாய்ப்பால் ஊட்டினாலும் இரண்டு வயது அளவில் அது 45 விழுக்காடாக குறைகிறது

*நாடுகளுக்கு இடையேயும் உள்ளேயும் தாய்ப்பால் ஊட்டும் அளவில் வேறுபாடு நீட்டிக்கிறது. உதாரணமாக  ஒரு நாட்டின் பல்வேறு இனக் குழுக்களிடையே தாய்ப்பாலூட்டுதலை தொடங்குவதிலும் தொடருவதிலும்  சமூகப் பொருளாதாரப், பின்னணி அடிப்படையில் வேறுபாடு உள்ளது

*உலக ஊட்டச்சத்துக்  குறியீடான,முதல் 6 மாதங்களுக்கு  தாய்ப்பால் மட்டும் தருவதை 20 25 இல் ,50 விழுக்காடாக அடைய மேலதிகமாக,10 ஆண்டுகளில் $5.7 பில்லியன் முதலீடு  அல்லது $4.70 ஒவ்வொரு பிறந்த  குழந்தைக்கும் , மிகக்குறைந்த மற்றும்,மிதமான வரு வாய்நாடுகளில் தேவைப்படுகிறது

தாய்ப்பால் ஊட்டுதல், மற்றும் தாய் மற்றும் சேய் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இந்த தடைகளை  உடைத்தெறியலாம். சான்றுகளின் அடிப்படையில் அமைந்தநடைமுறைகளை பொது சுகாதாரத்துறையில் கடைப்பிடிக்கும் போது தாய்ப்பால் ஊட்டும் அளவிலும் சமுதாயங்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்களிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் நம்முடைய முதலீடுகள் வளம்குன்றாததாகவும் நீண்ட காலத்துக்கு பலனளிக்கக் கூடியதாகவும் இருத்தல் நலம்.

வரிப்பணத்திலிருந்து அளிக்கப்படும் சமூக நலக் காப்பீட்டுக்கான திட்டங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை உள்ளடக்கிஇருக்க வேண்டும். தாய்மார்களுக்கு உகந்த வேலைச் சூழல் ,முறை சார்ந்த ,சாராத நிறுவனங்களில் தாய்ப்பாலூட்ட உகந்த சூழல் உருவாக உதவுகிறது தேசிய அளவிலான கொள்கைகளும் திட்டங்களும் இவ்விரு துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை,தந்தையர் மற்றும் பெற்றோர்களுக்கான விடுமுறையை அனைத்துலக வேலை நிறுவனத்தின் பரிந்துரையின்படி தர வேண்டும்

வேலை செய்யும் இடங்களில் இருக்கவேண்டிய வசதிகளான பாலூட்டும் அறை,தாய்ப்பாலூட்ட இடைவேளை,  ஆகியவை தரத்துடனும் பரந்தும் இருத்தல் முக்கியமானதாகும்.

செயற்கை குழந்தைஉணவுத்தயாரிப்பாளர்களின் சந்தைப்படுத்துதல் ,முக்கியமாக க் கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் கண்காணிக்கப்படுவதுடன் கட்டுப்படுத்தப்படவும் வே்ண்டும். வெகு ஜன மற்றும் வலைத்தளங்களில் அதிகரித்துள்ள அவர்களின் விளம்பரங்கள் குறித்து  சமூகவளைத்தள நிறுவனங்களுக்கு  சட்டங்களின் குறிப்பிட்ட பிரிவுகளைப் காட்டி எடுத்துச்சொல்லவேண்டும். உலகளாவிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அரசுகள் ஒன்றினைந்து இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி பொறுப்பேற்க வைப்பது எவ்வாறு? என்பதுபற்றி  சிந்திக்கவேண்டும்

*தாய்ப்பாலூட்டுதல் மற்றும் இளம் குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பை சட்டத்தொகுப்புகளை  அமல்படுத்தி கண்காணிப்பு நடைமுறைகளைக் கொண்டு வருவதன் மூலம் உறுதிப்படுத்தவேண்டும்.

 பிறப்பு முதல் 2 வருடம் மற்றும் அதற்குப் பிறகும் தாய்ப்பால் ஊட்டுதல் அதிகரிக்க அதிக அளவு நிதியை ஒதுக்கவும்.

*தேசிய மற்றும் உலக அளவிலான தாய்ப்பாலூட்டுதல் குறியீடுகளை அடைய கண்காணிப்பு முறைகளை பலப்படுத்தி நலத்திட்டங்களும் வழிமுறைகளும் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதனைக் கண்டறியலாம்

*தாய் மற்றும் பெற்றோர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் சட்டங்கள் தாய்ப்பாலூட்டுதலுக்கான ஆதரவு ஆகியவைகளை முறைசார்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில்  அமல்படுத்தவும்

*உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, பெரும் தொற்றுஉள்ளிட்ட அவசரகால மற்றும்  வழக்கமான சூழ்நிலைகளில் தாய்ப்பால் தர உதவும் கொள்கை நெறிகளை வகுத்துக் கொள்ளவும்

தாய்ப்பால் ஊட்டாததால் ஏற்படக்கூடிய செலவுகளை ஆராய பலநிலைகளில் இணைந்த நோக்கை கைக்கொள்ளவும் இதன் மூலம் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் தாய்ப்பாலூட்டுதலினைப் பாதுகாக்கவும் பரிந்துரைக்கவும் ஆதரிக்கவும் நம்மிடையே பொறுப்புணர்வை பகிர்ந்து கொள்ளவும் அழுத்தம் தரலாம்

தேவையான உபயோகமான தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் ஆதரவுச்செய்திகளை  மருத்துவச்சேவையுடன் தர இயலாமல்

பெரும்பாலான மருத்துவ கட்டமைப்புகள்  உள்ளன. தாய்ப்பாலூட்டும் குழந்தைகளுள்ள குடும்பத்தினர்  செயற்கைப்பால் தயாரிப்பு நிறுவனங்களால்திசை மாற வாய்ப்புள்ளது.பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் வியாபார நோக்கத்தில் செயற்கைப்பால் தயாரிப்பு நிறுவனங்கள் நலப்பணியாளர்களை குறிவைத்து அவர்கள் உதவி பெற்று தங்களுடைய நிறுவனத்தயாரிப்புகளைத் தாய்க்கும் சேய்க்கும் அறிமுகப்படுத்தி வந்துள்ளனர்.

கோவிட்19 பெருந்தொற்று தாய் சேய் நல சேவைகளை அளிப்பதிலும் அதனை பயன்படுத்துவதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு  பாதிப்பு மிகந்து ஏற்றத்தாழ்வும் இடைவெளியும் அதிகமாகியுள்ளது உதாரணமாக பல நாடுகளில் நிதி மற்றும் மற்ற ஒதுக்கீடுகள் தாய்ப்பால் ஊட்டுதல்  தொகுப்பிலிருந்து மாற்றி விடப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் மிகத் தெளிவாக கொரோனா உள்ள அல்லது உள்ளதாக சந்தேகிக்கப்படுகிற தாய் குழந்தை பிறந்தவுடன் சீக்கிரமே பால் தர ஆரம்பித்து தொடர்ந்து தர வேண்டும் குழந்தையோடு ஒரே இடத்தில் தோலோடு தோலாய் அரவணைத்து பாலூட்டுதலைத் தொடரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.ஆனால் சில அரசுகள் இதற்கு மாறான அறிவுரைகளை தங்களுடைய மருத்துவ கட்டமைப்புகளில் நடைமுறைப்படுத்தி உள்ளன

பொருத்தமற்ற உணவு விளம்பரங்களை  நிறுத்தஉலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி குழந்தை உணவு தயாரிப்பாளர்கள் நலப்பணியாளர்கள் இடையே ஆதாய முரண் கூடாது என்கிறது. அமைப்புகள் பணியாளர்களின் சங்கங்கள் மற்றும் அரசு சாராத சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஆதாய முரணைத் தவிர்க்க வேண்டும்

குழந்தை நேய மருத்துவமனை இயக்கத்தின் பகுதியாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி தாய்ப்பாலை பாதுகாத்து ஆதரவு தருவதற்கு சட்டத்தொகுப்புகளை  முழுமையாக ஏற்றுக் கொண்டு அமல்படுத்துவதை பத்து படிகளில் ஒன்றாக கொண்டுள்ளது.குழந்தை நேய மருத்துவமனை இயக்கத்தின் பத்து நெறிகளை செம்மையாகக் கடைபிடிக்கும் போது,தாய்ப்பாலூட்டுதல் அதிகமாகும் என்பதை சான்றுகள் உறுதி செய்கின்றன. தாய்ப்பால் ஊட்டுதல் பற்றி’ கல்விமற்றும் பயிற்சி நலப்பணியாளர்களுக்கு கிடைக்கும்,போது அவர்களின் புரிதலும் நடத்தை மற்றும் குழந்தை நேய மருத்துவ நெறிகளை கடைப்பிடிப்பதும் மேம்படும்.

பல்வேறு நிலைகளில் இயங்கும் கதகதப்பான சங்கிலி இயக்கம் மூலம் தாய்ப்பால் ஊட்டும் குழந்தைகளுள்ள எந்த குடும்பமும் தொடர் உதவியை தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளும்

மனித வளம் மற்றும் பயிற்சிக்கு போதுமான முதலீடு செய்து பயிற்சி பெற்ற நலப் பணியாளர்களை (சமுதாய நலப் பணியாளர்கள் உள்பட)அனைத்து நிலைகளிலும் தக்க வைப்பது தாய்ப்பாலூட்டல் ஆலோசனை மற்றும் உதவிதருவதற்கு தேவையான தன்னிறைவை அடைவதற்கு தேவைப்படும்(

ஆரம்ப சுகாதாரச்சேவைகளில்தாய்ப்பாலூட்டலை ஆதரித்து பக்கபலமாக இருக்கதேவையான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்

அகில இந்திய மருத்துவ சங்கங்கள்    குழந்தைஉணவுத்தயாரிப்பாளர்களிடமிருந்து ஸ்பான்சர்சிப் அல்லது ஆதரவு பெறுவதை நிறுத்தவும் மருத்துவக்கட்டமைப்புக்குள்இணைந்த குழு வேலையின்மூலம் கதகதப்பான சங்கிலி இயக்கத்தினை உருவாக்கவேண்டும்

தாய்ப்பாலூட்டுதல் பற்றிய அறிதல் மற்றும் திறன் பெறுதலை நலப்பணியாளர் பணிக்குச்சேரும்முன்னும் தொடர் கல்வித்திட்டத்தினை (கைக்குழந்தை மற்றும் இளங்குழந்தைகளுக்குஉணவு தருதல்) மாதிரித்திட்டம் மூலம் சேர்ந்திணைக்கலாம்

அகிலஉலக தொழிலாளர் நிறுவனத்தின் மகப்பேறு பாதுகாப்புக்கொள்கை

 c 183 ,முறை சார்ந்த மற்றும் சாராத பொருளாதாரச்சூழலில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு,பாலின வேற்றுமை, மகப்பேறு தொடர்பான உடல்நலபிரச்சினைகள்ஆகியவைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது இதில் .குறிப்பிடத்தக்கவை சம்பளத்துடன் கூடிய விடுமுறை,தாய்சேய் மருத்துவம்,வேலைப்பாதுகாப்பு,பாரபட்சமின்மை,கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்க்கு வேலை செய்யும் இடத்தில் மருத்துவப்பாதுகாப்பு,தாய்ப்பாலூட்ட வசதிகள் ஆகும்.இதோடு கூட,வளைந்துகொடுக்கக்கூடிய வேலைநெறிகள், ,போதுமான இடம், ஆதரவான வேலைசெய்யும் சூழல்,தாய்ப்பாலினை கறந்து எடுத்து சேமிக்க வசதி,ஆகியவையும் முக்கியம்.

நேரடியாகவும் மெய்நிகராகவும் இயங்கக்கூடிய குழுக்கள் தாய்ப்பால் இணையருக்கு நல்ல ஆதரவினை வழங்குவதுடன் நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வினையும் ஊட்டலாம். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும்  புதுமையான முக்கிய நடத்தை மாற்றுச்செய்திகள் செல்லப்பட வேண்டும்.சமுதாயத்தலைவர்கள் மற்றும் செல்வாக்குள்ளவர்கள் வாயிலாக பாரம்பரியத்திற்கு பொருந்திய மாறாச் செய்திகளை முக்கிய மற்றும் சமூக ஊடகங்கள் வழியே ஒலி\ஒளி பரப்பப்படவேண்டும்..சமூகச்செயற்பாட்டாளர்கள்விழிப்புணர்வுடன் செயல்பட்டு மின்னணுச்சந்தைப்படுத்துதலில் மீறல்களை கண்டறிந்து அதைக்கட்டுப்படுத்துவதைபற்றி யோசிக்கவேண்டும்.முக்கிய செய்தி ஊடகங்கள் வல்லுநர்களுடன் இணைந்து சரியான பக்கசார்பில்லாத செய்திகளை வெளியிட்டு பாதுகாத்து ஆதரவு அளிக்கலாம்

பல்வேறுசமூகப்பொறுப்பாளர்களிடம் கலந்துவிவாதித்து எவ்வாறு தாய்ப்பால் நட்புச்சமூகத்தினை சமுதாயப்பொதுவாகவும் சட்டத்தொகுப்புகளை ஏற்ற ஆதாயமுரணற்ற பொதுக்கருத்தினை எட்டுவது ? எனக்கண்டறியலாம்.தாய்ப்பாலூட்டுதலை பாதுகாப்பதும் அதற்கு ஆதரவுஅளிப்பதும் முழுச்சமுதாயத்தின் பொறுப்பு என்பதினை இது உறுதிசெய்யும்.

இறுதியாக,

1. தாய்ப்பால் ஊட்டுதலுக்கு , பொது சுகாதார அணுகுமுறை மூலம்  அரசு மற்றும்  முக்கிய செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து  பல்துறை பங்களிப்புடன் உகந்த சூழலை ஏற்படுத்துவது முக்கியம்

2.செயற்கை பால் தயாரிப்பு நிறுவனங்கள்  மின்னணு தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி தங்களுடைய தயாரிப்புகளை பொதுமக்களுக்கு  நேரடியாகச்சந்தைப்படுத்துகின்றனர் பெருந்தொற்றுக்காலத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது.

 நாம் அனைவரும் விழிப்போடு இருந்து செயற்கைப் பால் தயாரிப்பு நிறுவனங்களின் மின்னணு சந்தைபடுத்துதல் முறைகளை கண்காணித்து அவைகளை கட்டுப்படுத்தும் வழி முறைகளை ஆய்வு செய்ய வேண்டும்

3. இன்றும் செயற்கைப் பால் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் பற்றிய அகில உலக சட்டத்தொகுப்புகள் முக்கியம். இவை வரன்முறை, நன்னெறிக் கோட்பாடுகளை  மீறிய சந்தைப்படுத்துதலைத் தடுத்து பாதுகாக்கும்.தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்கி கண்காணித்து அமல்படுத்துவது மிகமுக்கியம்

 4.பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவையை வழங்கும் அனைத்து பணியாளர்களுக்கும் தாய்ப்பாலூட்டுதல் ஆலோசனைப் பயிற்சி, சட்டத்தோகுப்புகள்  மற்றும் ஆதாயமுரண் பற்றி பயிற்சி தரப்பட வேண்டும் 

 பல்வேறு சிறப்பு வல்லுனர்கள் இணைந்து  குழுவாக வேலை செய்வதை மருத்துவ கட்டமைப்புக்குள் உருவாக்க வேண்டும் இவர்களோடு சமுதாய நலப் பணியாளர்கள் மற்றும் குழுக்களை இணைத்து கதகதப்பான சங்கிலியை உருவாக்கி தாய்ப்பாலூட்டும் குழந்தைகளுள்ள குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவினை முதல் ஆயிரம் நாட்களுக்கு அளிக்க வேண்டும்

5.முறை சார்ந்த மற்றும் சாராத துறைகளில் பணியாற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் சமுதாயப் பாதுகாப்பு ,சம்பளத்துடன் கூடிய பெற்றோருக்கான விடுமுறை ,வேலை செய்யும் இடங்களில் போதுமான ஆதரவு மற்றும் தாய்ப்பாலூட்டும் உரிமைகளைப் பாதுகாத்தல் இதில் அடங்கும். அரசுகள், வேலை தரும் நிறுவனங்கள் ,தொழிற்சங்கங்கள், சமூக குழுக்கள் மற்றும் சமுதாயத்தின் இடையே கூட்டு முயற்சியால் இதனைச்சாதிப்போம்

6. உதவிகரமாக இல்லாத சமுதாயப் பழக்கங்கள் , காலம் காலமாக நிலவி வந்த உணவு வழக்கங்கள் மற்றும் வரம்பு மீறிய  செயற்கை பால்தயாரிப்பு நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல்  ஆகியவைபோதுமான அளவு தாய்ப்பால் ஊட்டுவதை தடுக்கின்றன.இதனை  சமுதாயத்தின் பல துறைகளில் உள்ள முக்கியமானவர்களிடையே ஏற்படும் கூட்டுறவு எதிர்கொண்டு வெல்லும்

கட்டுரை உலகத்தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பின் வெளியீட்டை 2021 ஐ ஒட்டி எழுதப்பட்டது.

கட்டுரையாளர் குழந்தைகள் நல மருத்துவர்.தாய்ப்பாலூட்டுவோர் கூட்டமைப்பின் உறுப்பினர்

டாக்டர். செல்வன்

DCH,DNB(Ped)MRCPCH(U.K)

மின்னஞ்சல்;selvanr4@gmail.com

Exit mobile version