Site icon childhealthtoday-childhealth wiki

சக்கை உணவுகளுக்கு பதிலாக சத்துள்ள உணவு

ஜங்க் புட் எனப்படும் சக்கை உணவுகளுக்கு மாற்றான சத்துள்ள நம் பாரம்பரிய உணவுகள்

1. மிட்டாய்கள்-மாற்றாக பேரீச்சம்பழம், தேன், கடலை மாவு உருண்டை ,எள்ளுருண்டை ராகி உருண்டை தேங்காய் மிட்டாய்

2. சிப்ஸ்- மாற்றாக கார நிலக்கடலை, உப்புக் கடலை ,சுண்டல், அப்பளம், வறுத்தஉருளை ,பொரித்த நேந்திரம் கை மசாலா பொரி.

3. ஐஸ்கிரீம்-மாற்றாக தேன், பப்பாளி, பலாப்பழம், பழச்சாறுகள், வெள்ளரிப்பழம்,

4. காரம்-மாற்றாக சீடை, வடகம், முறுக்கு ,வறுத்த முந்திரி ,காரப்பொரி ,மசாலா சுண்டல்

5. குளிர்பானங்கள்- மாற்றாக பழச்சாறுகள் ,நீராகாரம், இளநீர் ,நீரா பதனீர்,எலுமிச்சம் பழச்சாறு

6. காப்பி டீ- மாற்றாக சுக்கு மிளகு திப்பிலி கருப்பட்டி இஞ்சி பானகம், கொத்தமல்லி காபி, சோயா காபி

7. சீனி- மாற்றாக தேன் ,கருப்பட்டி, வெல்லம்

8. இனிப்புகள்-மாற்றாக பாயசம், இனிப்புக்கொழுக்கட்டை ,அதிரசம், லட்டு ,பஞ்சாமிர்தம் ,வெல்லப்பா,கு நேந்திரம் உலர்ந்த விதைகள் கொட்டைகள் ,உலர் பழங்கள் வெல்லப் பணியாரம்.

9. சாக்லேட்- மாற்றாக ரோஜா குல்கந்து சூறைத்தேங்காயுடன் கருப்பட்டி வில்லை

10. பிஸ்கட்-மாற்றாக வெல்லச்சுழியான்

11. பபுள்கம்-மாற்றாக உலர்ந்த திராட்சை, அருகம்புல், நெல்லிவற்றல், எலுமிச்சம் பழத்தோல் ,சுட்டு அவித்த சோளக்கதிர்

12. கேக்- மாற்றாக பால் கொழுக்கட்டை,பணியாரம்

13. மிக்சர் -மாற்றாக பொட்டுக்கடலை பொரி ,அவல் வெல்லம்

14. டப்பா உணவுகள் மாற்றாக-வீட்டு தயாரிப்பு உணவு

15.சமோசா- பருப்பு வகை அடை பச்சடி கொஸ்து

டாக்டர் விருதகிரி யின் குழந்தை ஆரோக்கியத்திற்கான அடிப்படை விதிகள் -1 to +2 புத்தகத்தில் இருந்து

Exit mobile version